Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வில்லியனுார் திருக்காமீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி தேரோட்ட விழா
எழுத்தின் அளவு:
 சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி தேரோட்ட விழா

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2026
08:06

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 24ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் மண்டகப்படியாக தினமும் சாமி வீதி உலா நடந்தது. மே 28 ல் திருக்கல்யாணம், 29ல் கழுவன் திருவிழா நடந்தது. 9ம் நாளான நேற்று வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது.

காலை 10:30 மணிக்கு பூரணை, புட்கலை தேவியருடன் சேவுகப்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேரில் ஏறி சுவாமியை வழிபட்டனர். மதியம் 3:50 மணிக்கு சந்திவீரன் கூடத்தில் இருந்து நாட்டார்கள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து, மாலை 4:00 மணிக்கு தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்து 5:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. பக்தர்கள் தேங்காய்களை தேரடிப்படியில் வீசி உடைத்தனர். தொடர்ந்து தேரடி பூஜை நடந்தது. தேரோட்டத்தையொட்டி காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது. நான்கு ரத வீதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். திருவிழாவின் பத்தாம் நாளான இன்று இரவு பூப்பல்லக்கு உற்ஸவம் நடைபெறுகிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இமயமலை தொடரில் உள்ள கிரவுஞ்ச மலையில் உள்ள நம்ம ஊர் முருகனான கார்த்திக் சுவாமியை தரிசிக்க வருமாறு, ... மேலும்
 
temple news
பரமக்குடி;  பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழாவில் சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: திருக்காமீஸ்வரர் கோவில் பிரமோற்சவ தேர் திருவிழாவில் நேற்றுசண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் ... மேலும்
 
temple news
 திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவில், ... மேலும்
 
temple news
அன்னூர்; முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில், நாளை திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar