காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் வசந்த உத்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2026 08:06
காஞ்சிபுரம்; வசந்த உத்சவத்தையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மூன்று நாட்கள் நடைபெறும், வசந்த உத்சவம் துவங்கியது. இதில், பல்வேறு மலர்கள், காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்தில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன், உற்சவர் காமாட்சி அம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். அம்மனுக்கு கோவில் ஸ்தானீகர்கள் வாயிலாக புஷ்பாஞ்சலி, பல்வேறு பூஜை, மஹா தீபாராதனை நடந்தது.