Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி சங்கராச்சாரியார் ... தஞ்சையில் முத்து பல்லாக்கு விழா: விநாயகர், முருகன் ஊர்வலம் தஞ்சையில் முத்து பல்லாக்கு விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2026
09:06

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாள் உத்சவமான இன்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்சவம் கடந்த 28ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தங்க சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் வரதராஜ பெருமாள் வீதியுலா வந்தார். ஆறாம் நாள் உத்சவமான நேற்று காலை தங்க பல்லக்கில், வேணுகோபாலன் திருக் கோலத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் வீதி உலா வந்தார். இந்நிலையில், பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாள் பிரபல உத்சவமான தேரோட்டம் இன்று காலை நடக்கிறது.

இதில், அதிகாலை 3:00 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு, சன்னிதி தெரு, செட்டி தெரு, டி.கே.நம்பி தெரு வழியாக வரதராஜ பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பல்வேறு பூஜைகளுக்குப்பின் காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்தனர். இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வந்தார். உத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி, பணியாளர்கள், கோவில் பட்டாச்சாரியார்கள், உபயதாரர்கள் இணைந்து செய்திருந்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar