Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யலுார் கோயில் திருவிழாவில் கழு மரத்தில் தவறி விழுந்த பூஜாரி
எழுத்தின் அளவு:
அய்யலுார் கோயில் திருவிழாவில் கழு மரத்தில் தவறி விழுந்த பூஜாரி

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2026
03:06

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் கழு மரம் ஏறிய போது உச்சியிலிருந்து பூஜாரி தவறி விழுந்தார். கீழே நின்றிருந்தவர்கள் தாக்கி பிடித்ததால் காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.


முத்தாலம்மன் கோயில் திருவிழாக்களில் பாரம்பாரியமாக படுகளம் அமைத்து கழு மரம் ஏறும் நிகழ்வு நடக்கும். பாரம்பரியமாக மரம் ஏறும் உரிமை பெற்ற குழுவினர் ஏறி உச்சியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பர். கோயில் முன்பாக படுகளம் வழிபாடு முடிந்ததும் அவர்கள் கீழே இறங்குவதும் வழக்கம். இந்த நிகழ்வில் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் மரம் ஏறும்போது தவறி விழுந்தால் தாங்கி பிடிக்கும் நோக்கில் ஒரு குழுவினர் காத்திருப்பதும் வழக்கம். இந்நிலையில் அய்யலூர் ஏ.கோம்பையில் ஜூன்3ல் துவங்கிய முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நேற்று மாலை படுகளம் நிகழ்வுக்காக 45 அடி உயரமுள்ள 2 கழு மரங்கள் நடப்பட்டிருந்தது. இதில் பூஜாரி சின்ராஜ் 40 உள்ளிட்ட குழுவினர் கழு மரங்களில் ஏறினர். உச்சியை சென்றடையும் நிலையில் இருந்த சின்ராஜ் எதிர்பாராமல் கீழே தவறி விழுந்தார். கீழே விழுவதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியாகினர். மரத்திற்கு கீழே இருந்தவர்கள் சின்ராஜ் முழு வேகத்தில் தரையில் விழுவதை தடுத்து தாக்கி பிடித்து உதவினர். இதனால் கைகள், இடுப்பு பகுதியில் காயங்களுடன் சின்ராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரை தாங்கி பிடித்த 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுபோன்ற நிகழ்வுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீசுவரர் கோயில் தேரோட்டம். இரண்டு தேர்களில் ... மேலும்
 
temple news
திருமலை: திருப்பதி கோவிலில் ஏஐ தொழில்நுட்பம் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. முன்னோர்கள் ... மேலும்
 
temple news
கோவை; சிங்காநல்லூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள்  என்று அழைக்கப்படும் ஞீ த்ரிவிக்ரம நாராயண பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பள்ளிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar