அரும்பாக்கம்: அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள, பாஞ்சாலி அம்மன் கோவிலின் 43ம் ஆண்டு தீமிதி திருவிழா, இன்று காலை தொடங்கியது.
இதை முன்னிட்டு, அதே பகுதியில் உள்ள உத்தனாட்சி அம்மன் கோவிலில் இருந்து, திரளான பக்தர்கள் 1,008 பால்குடம் ஏந்தி, தீச்சட்டி, அலகு குத்தி, முக்கிய வீதிவழியாக ஊர்வலமாக வந்து, நேர்த்திகடன் செலுத்தினர். பின், அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அன்னதானமும், காப்பு கட்டுதலும் நடந்தது. நாளை காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு சந்தனக் காப்பும், சாத்துப்படி புஷ்ப அலங்காரத்துடன் தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.