மயிலாடுதுறை மங்கள சாஸ்தா வழித்துணை ஐயனார் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2026 02:06
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா விளநகர் கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்கலா சமேத ஶ்ரீ மங்கள சாஸ்தா வழித்துணை ஐயனார் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனையொட்டி கோவிலின் எதிர்புறம் யாகசாலை அமைத்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து முதல் கால யாகசாலை பூஜை நேற்று தொடங்கிய நிலையில் இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூர்ணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.
அங்கு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் கோபுர கலசம் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.