Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஏக ... உலகளந்த பெருமாள் கோவிலில் மின்வாரிய துறை தலைவர் ராதாகிருஷ்ணன் தரிசனம் உலகளந்த பெருமாள் கோவிலில் மின்வாரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பாபிஷேக கோபுரங்களை தரிசிப்பது மனச்சுமையை நீக்கும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கும்பாபிஷேக கோபுரங்களை தரிசிப்பது மனச்சுமையை நீக்கும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2026
08:06

சென்னை: கும்பாபிஷேகத்தின்போது கோவில் கோபுரங்களை தரிசிப்பது, கடவுள் வழிபாடு செய்வது மக்களின் மனச்சுமையை நீக்கி நன்மை கொடுக்கும் என காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.

சென்னை பெசன்ட் நகர் ஊரூர் குப்பம் - ஆல்காட் குப்பம் பகுதியில் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை 7:00 மணிக்கு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலச பூஜையை துவக்கி வைத்து வேத மந்திரங்கள் முழங்க, கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

பின் அவர் பேசியதாவது: தேச நலன், ஒற்றுமை, மன அமைதிக்கு அடிப்படையாக ஆன்மிகம் விளங்குகிறது. கும்பாபிஷேகத்தின்போது கோவில் கோபுரங்களை தரிசிப்பது, கடவுள் வழிபாடு செய்வது மக்களின் மனச்சுமையை நீக்கி நன்மை கொடுக்கும். தர்ம நெறிபடி வாழ, கல்வி, ஆன்மிக அறிவை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இளைய தலைமுறைகள் பாரம்பரியம், கலாசாரம், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டுவதுடன் சமுதாய பணி செய்ய வேண்டும். நல்ல எண்ணங்களை உருவாக்குவதே சிறந்த தர்மம். பக்தி தான் மூலை முடுக்கெல்லாம் பரவி தேசத்தை பலப்படுத்தியது. ஆன்மிகம் ஒற்றுமை, சமூக நற்பண்புகளை வளர்க்கக்கூடியது. அதற்கு ஏற்ப மக்கள் மனங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினார். கும்பாபிஷேக நிகழ்ச்சியை திருப்பணிக்குழு, பஞ்சாயத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னின்று நடத்தி னர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 
temple news
கடலாடி: கடலாடி அருகே மலட்டாற்று பகுதியில் இயங்கி வரும் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மைய ஆசிரமத்தில் ருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar