வள்ளலார் பிறந்த நாள்: அன்பை மட்டும் விதைப்போம்.. ஆனந்தத்தை அறுவடை செய்வோம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2026 10:10
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த தினம் இன்று. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் மக்களின் பசித்துயர் போக்க, சத்திய தர்ம சாலையை நிறுவினார்.
கலியுகாதி 4925 ஆம் ஆண்டு, சுபானு ஆண்டு, புரட்டாசித் திங்கள் 21 ஆம் நாள்(5.10.1823) ஞாயிற்றுக்கிழமை 29.55 நாழிகையில் மாலை 5.55 மணிக்கு சின்னம்மையாருக்கு ஐந்தாவது மகவாகத் திருவருட் பிரகாச வள்ளலார் தோன்றினார்.
கருங்குழியியை உறைவிடமாகக் கொண்டிருந்த நம்பெருமான் அவரது சன்மார்க்க சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தருமசாலை ஒன்றையும் வழிபாட்டுக்கு ஞானசபை ஒன்றையும் உருவாக்கும் எண்ணத்தில் அதற்கான பெருவெளி ஒன்றைத் தேடி, தம் அன்பர்களுடன் கருங்குழிக்கு வடபுறமுள்ள பார்வதிபுரம் எனப்படும் வடலூருக்கு வந்தார். வள்ளல் பெருமான் அருளிய பாடல்களைத் தொகுத்து அவற்றை திருமுறைகளாக வகுத்தவர் தொழுவூர் வேலாயுத முதலியார். மொத்தம் ஆறு திருமுறைகளாக இவை தொகுக்கப்பட்ட போதிலும் முதன் முதலில் 1867 ஆம் ஆண்டு, இறுக்கம் இரத்தின முதலியார்,சிவானந்தபுரம் செல்வராய முதலியார், புதுவை வேலு முதலியார் போன்றவர்கள் ஒத்துழைப்புடன் தொழுவூர் வேலாயுதம் முதலியார் தொகுத்த இராமலிங்க சுவாமிகள் என்று வழங்கக் கூடாது என்று வள்ளலார் தடுத்துவிட்டதால் திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளையவர்கள் என்று குறிப்பிடப்பெற்றது. வடலூருக்கு (பார்வதிபுரம்) தெற்கே ஐந்துகிலோமீட்டர் தொலைவில் (அதாவது வடலூர்-நெய்வேலி நெடுஞ்சாலையில், வடலூரிலிருந்து 2 கி.மீ தொலைவு சென்று, தெற்கே செல்லும் பாதையில் 3 கி.மீ தொலைவில் உள்ளது) மேட்டுக்குப்பம் உள்ளது. மேட்டுக்குப்பத்தின் மேற்குப்புறம் அக்காலத்தில் வைணவ குருமார்கள் வந்து உபதேசம் செய்யும் திருமாளிகை என்னும் குடிசை வீட்டில், மேட்டுக்குப்பத்தில் வாழும் மக்களின் வேண்டுகோளினை ஏற்று சன்மார்க்க நெறியைப் போதிக்கச் சென்ற பெருமான் தம்முடைய அருள் வாழ்க்கையினை முற்றிலுமாக அங்கேயே வாழ்ந்து வையத்தில் பெருநெறியைப் பரப்பினார்கள். தருமசாலையில் அவர் ஏற்றிய அடுப்பு இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம், பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது. பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற தாரக மந்திரமான அருள் பசி அனைவருக்குள்ளும் இருக்கட்டும்! இன்று உண்மை, அன்பால் அருட்பெருஞ்ஜோதியை வழிபாடு செய்து அருள் ஒளியை நமக்குள் காண்போம்!