Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செய்யூர் நாகாத்தம்மன் கோவிலில் ... தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் துாய்மை பணி தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் துாய்மை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பினாயூர் பிரம்மீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பினாயூர் பிரம்மீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2026
01:06

உத்திரமேரூர்: பினாயூர் பிரம்மீஸ்வரர் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூர் கிராமத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான திரிபுரசுந்தரி சமேத பிரம்மீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 2008ல் கும்பாபிஷேக விழா நடந் தது. பின், விமான கோபுரம் பழுதடைந்து காவல் தெ ய்வங்கள் உள்ளிட்ட சுவாமி சிலைகள் சிதிலம் அடைந்து இருந்தன. இதையடுத்து, 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கும்பாபிஷேக விழா நடத்த அப்பகுதி மக்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, சில மாதங்களாக கோவில் கட்டடங்கள், கோவில் மூல ஸ்தானங்களில் உள்ள ஐந்து நிலை கோபுரங்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன.

கோவிலில் உள்ள விநாயகர் மற்றும் முருகன் சன்னிதிகளில் மண்டபம் மற்றும் நந்தி, நவகிரகம் உள்ளிட்டவை புதிதாக அமைத்தல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. புனரமைப்பு பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி, 5ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், நேற்று முன்தினம் காலை மூலவர் சுவாமி, அம்பாளுக்கு அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சியும் நடந்தன. நேற்று காலை கோ பூஜை, விக்னேஷ்வர பூஜைகளை தொடர்ந்து, காலை, 9:45 மணிக்கு, யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு, 10:00 மணிக்கு முகப்பு மற்றும் அனைத்து கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar