சோம்பேறியான இளைஞன் ஒருவன் அறிஞர் டால்ஸ்டாயிடம், ‘என் தந்தைக்கு கால் ஒடிந்து விட்டது. தாயாருக்கும் உடல்நிலை சரியில்லை. உதவி செய்யுங்கள்’ எனக் கேட்டான். 50 ரூபாய் வேண்டுமா... 500 ரூபாய் வேண்டுமா எனக் கேட்டார்.
அவனோ 500 ரூபாய் கொடுங்கள் என்றான் ஆவலுடன். ஏமாற்றுக்காரன் என்பதை உணர்ந்த அவர், ‘உழைப்பு இன்றி உலகில் எதுவும் நடக்காது. 50 ரூபாய் வேண்டும் என்றால் உன் விரலை வெட்டிக் கொடு. 500 ரூபாய் வேண்டும் என்றால் கையை வெட்டிக் கொடு’ எனச் சொன்னார். இளைஞனுக்கு சுரீர் என உறைத்தது. ‘என்னை மன்னியுங்கள்... இனி பொய் சொல்ல மாட்டேன். உழைத்து வாழ்வேன்’ என்றான்.