Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் ... அழகர் கோவிலில் அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ் சாமி தரிசனம் அழகர் கோவிலில் அறநிலைய துறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தாரம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்ய கற்சிலைகள் கரிகோல உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முத்தாரம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்ய கற்சிலைகள் கரிகோல உலா

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2026
09:06

 மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் அருகே அமையும் முத்தாரம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, கற்சிலைகள் கரிகோல உலா கொண்டு வரப்பட்டன. துாத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் பகுதியில், முத்தாரம்மன் கோவிலும், அதன் தசரா உத்சவமும் பிரசித்தி பெற்றது. திருக்கழுக்குன்றம் சுற்றுப்புற பகுதி பக்தர்கள், முத்தாரம்மன் வழிபாடு கருதி, இப்பகுதியில் கோவில் அமைக்க முடிவெடுத்தனர்.

முத்தாரம்மன் திருக்கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தினர், பக்தர்கள் நன்கொடை பங்களிப்பில், திருக்கழுக்குன்றம் அருகில், ஈகைரத்தினாபுரம் புறவழி சந்திப்பு பகுதியில், ஞானபுரீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலை, தற்போது அமைக்கின்றனர். மதுரைவீரன் சன்னிதியும் கோவிலில் அமைகிறது. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள, சுவாமியர் கற்சிலைகள், மாமல்லபுரம் தனியார் சிற்பக்கூடத்தில் வடிக்கப்பட்டு, அங்கிருந்து நேற்று இங்கு கொண்டு வரப்பட்டடன. கரிகோல உலாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கரிகோல உலா என்பது கோவில்களில் புதிதாகச் செய்யப்பட்ட சிலைகள், மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன், அப்பகுதி மக்களுக்கு அருள்பாலிப்பதற்காக மேற்கொள்ளப்படும் வீதி உலாவாகும். சிலைகளை இந்து முன்னணி அமைப்பினர் வரவேற்றனர். தொடர்ந்து, வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு கிரிவலம் சென்றும், முக்கிய வீதிகளில் கரிகோல உலா சென்றும் கோவிலை அடைந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar