பதிவு செய்த நாள்
24
ஜன
2013
11:01
பெரம்பலூர்: மதனகோபால ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் பெரம்பலூர் கலெக்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெரம்பலூர் மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலஸ்வாமி கோவில், இரண்டு கோடி ரூபாய் செலவில் லட்சுமி ஹயக்கிரீவர் சன்னதி, நவநீதகிருஷ்ணன் சன்னதி, தன்வந்தரி ஞானசரஸ்வதி சன்னதி, கணேசர் நாகர் சன்னதி, மதன கோபாலன் நுழைவு வாயிலில், புதிய, ஐந்து நிலை ராஜகோபுரம், வடக்குப்பகுதியில் வைகுண்ட ஏகாதசி நுழைவு வாயில் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த, 21ம் தேதி நித்திய ஆராதனம் புண்யாக வாசனம் வாஸ்து ஹோமம், அகல் மிசப்ராயசித்தம், அனுக்ø க அங்குரார்ப்பணம், திருவாராதனம், யாகசாலை பிரவேசம் சாற்றுமுறை, சர்வ ஆலய மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சமர்ப்பித்தல் நிகழ்ச்சிகளும் நடந்தது. கடந்த, 22ம் தேதி கும்ப திருவாராதனம் கலச ஸ்தாபனம், மகாசாந்தி ஹோமம், பஞ்ச கலச நவகலச சதுர்தச கலச மகாசாந்தி, திருமஞ்சனம் சாற்று முறை, நேற்று காலை, 6 மணி முதல் விஸ்வரூபம் மகாபூர்ணாகுதி, கும்ப புறப்பாடும் அதனைத்தொடர்ந்து 10 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது யாகசாலை பூஜைகளை விஜயராகவ பட்டாச்சாரியார், சுதர்சன் ராமானுஜர் கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன் அடங்கிய பட்டாச்சாரியார் குழுவினர் நடத்தி வைத்தனர். கும்பாபிசேக விழாவில் பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது, எஸ்.பி., ராஜசேகரன், எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன், செயலாளர் நீல்ராஜ், துணைத்தலைவர் கதிரவன், இயக்குனர்கள் பூபதி, மணி, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்ரமணியம், செயலாளர் விவேகானந்தன், அறநிலையத்துறை கமிஷனர் தனபால், நகராட்சி தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் ராமசந்திரன் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.