பதிவு செய்த நாள்
24
ஜன
2013
11:01
திருநெல்வேலி: மேல ஓமநல்லூர் செண்பகவல்லி அம்பாள் உடனுறை பிரணேஸ்வரர் கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை கோபாலசமுத்திரம் அருகே மேல ஓமநல்லூரில் தாமிரபரணி ஆறும், பச்சையாறும் சூரிய தீர்த்தம் அமைப்புடன் இணையும் புனித தலத்தில் செண்பகவல்லி அம்பாள் உடனுறை பிரணேஸ்வரர் கோயில் உள்ளது.
திருச்செந்தூர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் நடந்தது. கும்பாபிஷேக விழா கடந்த 18ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினந்தோறும் யாகசாலை பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேக விழாவான நேற்று காலை நான்காம் கால பூஜை, ஸ்பர்சாகுதி, திரவ்யாகுதி, கடம் எழுந்தருளல் நடந்தது. மேள தாளங்கள், பஞ்சவாத்தியங்கள், வேதமந்திரங்கள் முழங்க காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சுவாமி, அம்பாள், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திருச்செந்தூர் ஈஸ்வரமுத்து சுவாமி பட்டர், சண்முகபட்டர், மீனாட்சிசுந்தரம் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர். விழாவில் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ., சுப்பையா, திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் சுதர்ஸன், தக்கார் கோட்டை மணிகண்டன், கண்காணிப்பாளர் சாத்தையா, கோபாலசமுத்திரம் டவுன் பஞ்., தலைவர் கணேசன், தாழவாடி செல்வக்குமார் சுவாமிகள், குற்றாலிங்கம், பழனிச்செல்வம், பஞ்., துணைத்தலைவர் தங்கவேல், அதிமுக ஒன்றிய செயலாளர் கருத்தபாண்டியன், தாயப்பராஜா மற்றும் சிவா, ஜோதி, மந்திரமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் கருத்தபாண்டி, பொறியாளர் முருகன், மீனாட்சிசுந்தரம், செந்தில், கண்ணன், செயல் அலுவலர் லிசி, பிரணேஸ்வரர் நற்பணி மன்ற தலைவர் ரவிச்சந்திர சுவாமிகள், செயலாளர் தங்கவேல், பொருளாளர் மந்திரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. இரவு புஷ்பாஞ்சலி, சுவாமி, அம்பாள் வீதியுலா, தீபாராதனை நடந்தது. 200 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடந்ததால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.