Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விசூர் திரவுபதியம்மன் கோவிலில் 21ல் ... செஞ்சி அருகே கி.பி., 11ம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு செஞ்சி அருகே கி.பி., 11ம் நூற்றாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலையத்துறையில் கூம்பு வடிவ இலச்சினை பூசாரிகள் சங்கம் கேள்வி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அறநிலையத்துறையில் கூம்பு வடிவ இலச்சினை பூசாரிகள் சங்கம் கேள்வி!

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2026
03:06

பல்லடம்; தமிழக அரசு இலச்சினை இருக்க, ஹிந்து அறநிலையத்துறையில் மட்டும் கூம்பு வடிவ இலச்சினை கூடுதலாக பயன்படுத்தப்படுவது ஏன்? என, கோவில் பூசாரிகள் நலச்சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து அதன் மாநில தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ‌ராஜகோபுரம், தேசியக்கொடி மற்றும் வாய்மையே வெல்லும் என்ற வாசகத்துடன் கூடிய தமிழக அரசின் இலச்சினைதான் பல ஆண்டு காலமாக தமிழக அரசின் இலச்சினையாக உள்ளது. அனைத்து அரசுத்துறையிலும் இந்த இலட்சினைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஹிந்து அறநிலையத்துறையில் மட்டும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, கூடுதலாக, கூம்பு வடிவ இலச்சினை பயன்படுத்தப்படுகிறது. முன்பு, அறநிலையத்துறை சார்பில் வெளியாகி வரும் திருக்கோவில் மாத இதழில் மட்டுமே இடம்பெற்று வந்த இந்த இலச்சினை, தற்போது, அறநிலையத்துறை சார்பில் வெளியாகும் டெண்டர் அறிவிப்புகள்,

பேனர்கள், ஏல அறிவிப்பு உள்ளிட்ட அனைத்திலும், தமிழக அரசு இலச்சினை உட்பட, மேற்குறிப்பிட்ட கூம்பு வடிவிலான இலச்சினையும் இடம்பெற வேண்டும் என, அறநிலையத்துறை சார்பில் வலியுறுத்தப்படுகிறது. மசூதி வடிவில் உள்ள இந்த கூம்பு வடிவ இலச்சினை அறநிலையத்துறையில் மட்டும் எதற்காக கூடுதலாக பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியவில்லை. ஐந்து ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறை, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இதர அரசு துறைகளைப் போன்று, அறநிலையத்துறையிலும், தமிழக அரசின் இலட்சினையை மட்டுமே பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar