பதிவு செய்த நாள்
25
ஜன
2013
10:01
பழநி கோயில் சாதாரண நாட்களில் காலை 6 மணிக்கும், தைப்பூசம், பங்குனி உத்திரம்,கார்த்திகை, கந்தசஷ்டி விழா நாட்களில் அதிகாலை 4 மணிக்கும் திறக்கப்படும். இரவு 8.30 மணி வரை தொடர்ந்து திறந்திருக்கும். சாத்தப்படும். திருவிழா நாட்களில் சாத்தும் நேரம் மாறும். காலை 6.40க்கு விளாபூஜை, சாது அல்லது சந்நியாசி அலங்காரம். 8க்கு சிறு காலசந்தி, வேடர் அலங்காரம். 9க்கு காலசந்தி, பாலசுப்ரமணியர் அலங்காரம். மதியம் 12க்கு உச்சிக்காலம், வைதீகாள் அலங்காரம். மாலை 5.30க்கு சாயரட்சை, ராஜ அலங்காரம். இரவு 8.30 க்கு இராக்காலம்(அர்த்தஜாமம்) புஷ்ப அலங்காரம். ராஜ அலங்காரத்தில் முருகனை தரிசிக்க விரும்புவோர் அதிகம். சாதாரண நாட்களில் கால பூஜையில் தரிசனம் செய்ய ரூ.150, விழா நாட்களில் ரூ.300 கட்டணம். விளாபூஜையில் சுக்கு சர்க்கரை, கவுபீன தீர்த்தமும், இராக்காலத்தில் தினைமாவும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
இன்றைய நிகழ்ச்சி:
காலை 9: முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கில் எழுந்தருளல்
இரவு 7.30: வெள்ளி யானை வாகனத்தில் பவனி.