பதிவு செய்த நாள்
25
ஜன
2013
10:01
ராமேஸ்வரம்: தைப்பூச விழா யொட்டி, நாளை (ஜன., 26) ராமேஸ்வரம் கோயிலில் இருந்து, பஞ்சமூர்த்திகள் புறப்பாடானதும் நடை சாத்தப்படுகிறது. கோயில் இணைகமிஷனர் செல்வராஜ் கூறியதாவது: ஜன.,26 ல், தைப்பூச திருவிழா யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து, 3.30 முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து, ஐந்து கால பூஜைகள் நடக்கிறது. காலை 10.30 க்கு மேல், கோயிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி, லெட்சுமணேசுவரர் தீர்த்தம் செல்கின்றனர். மதியம் 12.00 மணிக்கு தீர்த்த வாரி உற்சவம் நடக்கிறது. பஞ்ச மூர்த்திகள் புறப்பாடானதும், கோயில் நடை சாத்தப்படும். மாலை 6 மணிக்கு, பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை நடக்கிறது. பின்னர், தெப்ப விழா உற்சவம் முடிந்தவுடன், அங்கிருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி, வீதி உலாவாக, கோயிலுக்கு வந்த பின், நடை திறக்கப்பட்டு, அர்த்தசாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜை நடைபெறும், என்றார்.