பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.81 கோடி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2026 08:06
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை (ஜூன் 24ல்) நேற்று நடந்தது. அதில் ரூ.2.81 கோடி காணிக்கையாக கிடைத்தது.
பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி (ஜூன் 24ல்) நேற்று நடந்தது. உண்டியல் எண்ணிக்கையில் பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கையில் ரூ.2 கோடியே 77 லட்சத்து 77 ஆயிரத்து 75, வெளிநாட்டு கரன்சி 611 எண்ணங்கள், தங்கம் 526.7 கிராம் வெள்ளி 25.546 கிலோ கிடைத்தது. மேலும் பழநி முருகன் கோயில் உபகோயில்களான ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில், உண்டியலில் ரூ.10 ஆயிரத்து 503, குழந்தை வேலப்பர் கோயிலில் ரூ. 82 ஆயிரத்து 353, பாலசமுத்திரம் பெருமாள் கோயில் உண்டியலில் ரூ. 51 ஆயிரத்து 270, கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில் உண்டியலில் ரூ. இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 275 என மொத்தம் ரூ. 2 கோடியே 81 லட்சத்து 75 ஆயிரத்து 476 காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், மற்றும் பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.