காஞ்சி கந்தப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் சங்கராச்சாரியார் விஜயேந்திரர் நடத்தி வைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2026 08:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அப்பாராவ் தெருவில் உள்ள கந்தப்பர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர், கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி நடத்தி வைத்தார்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 21ம் தேதி கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. அதை தொடர்ந்து, தினசரி யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு ஹோமங்கள் வேத விற்பன்னர்களால் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, யாகசாலையில் இறுதி கட்ட பூஜைகள் நடைபெற்று மகா பூர்ணாஹுதி தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, காலை 11:00 மணியளவில் புனிதநீர் அடங்கிய கலசங்கள் யாக சாலையிலிருந்து எடுத்து செல்லப்பட்டன.
காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர், ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான விமானங்கள் மீது புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார். கும்பாபிஷேகத்தை காண காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் அமைந்துள்ள சார விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஜன கல்யாண் திட்டத்தின் கீழ் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட இக்கோவிலின் கும்பாபிஷேக விழாவில், காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் பங்கேற்று விழாவினை நடத்தி வைத்தார்.