பதிவு செய்த நாள்
25
ஜூன்
2026
08:06
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில், மஹா சுதர்சன ஜெயந்தி விழா நடந்தது.
பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், சுதர்சன ஜெயந்தியையொட்டி, காலை, 5:00 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை, 9:00 மணிக்கு சுதர்சன ேஹாமம், காலை, 11:00 மணிக்கு பூர்ணாஹூதியும், 11:30 மணிக்கு உற்சவர் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அறங்காவலர் குழு தலைவர் மணிகண்டன், செயல் அலுவலர் குமுதவள்ளி மற்றும் அறங்காவலர்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், காலை, 9:30 மணிக்கு சுதர்சன ேஹாமம், காலை, 10:30 மணிக்கு சக்கரத்தாழ்வார் மூலவர், உற்சவருக்கு திவ்ய திருமஞ்சன அபிேஷகம் நடைபெற்றன. மதியம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் அன்ன பிரசாதம் வழங்கப் பட்டது.