பதிவு செய்த நாள்
25
ஜன
2013
11:01
பூதப்பாண்டி: பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவில் தேர்திருவிழா இன்று நடைபெறுகிறது. பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவில் தை பெரும் திருவிழா கடந்த 17 ம் தேதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடந்து வருகிறது. விழாவில் தினமும் சுவாமியும், அம்பாளும் கற்பக விருட்சம்,காமதேனு, வெள்ளி ரிஷப வாகனம், இந்திர, பூங்கோவில் வாகனம், கைலாச பர்வதம் மற்றும் கற்பக விருட்சம் வாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் விதி பவனி வந்தது. எட்டாம் திருவிழாவான நேற்று காலை நடராஜ மூர்த்தி வீதி பவனி வந்தது. தொடர்ந்து சுவா மிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், நடராஜமூர்த்திக்கு அஷ்டாபிஷேகமும் மாலை யானை ஸ்ரீபலியும் நடந்தது. மேலும் சமய சொற் பொழிவுகளும் இரவு நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. ஒன்பதாம் நாளான இன்று (25 ம தேதி) காலை எட்டு மணிக்கு மேல் ஒன்பது மணிக்ககம் திருத்தேர்களில் விநாயகரையும், சுவாமியையும், அம்பாளையும் எழுந்தருளச் செய்து தேர்வடம் தொட்டிழுத்தல் நடைபெறும். தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால் நிகழ்ச்சியைத் தொடங்கி வைப் பார். தமிழ்நாடு மின்வாரிய தென்மண்டல பொறியாளர் பகவதியப்பன், மாவட்ட திட்ட குழு உறுப்பினரும் மாவட்ட கவுன்சிலருமான தாணுபிள்ளை, தோவாளை பஞ் யூனியன் தலைவர் பூதலிங்கம் பிள்ளை, தோவாளை தாசில்தார் வசந்தராஜன், பூதப்பாண்டி பஞ்சாயத்து தலைவர் கரோலின் ஆலிவர்தாஸ் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.மாலை சமய சொற்பொழிவும்,இரவு பக்தி இன்னிசையும் நடைபெறும். இரவு சப்தா வர்ணம் நடைபெறும்.
(26 ம் தேதி) பத்தாம் நாள் காலை சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிது. மாலை சமய சொற்பொழிவுகளும், நகைச்சுவை சொல்லரங்கம் நடைபெறும். இரவு பத்து மணிக்கு தெப்பதிருவிழா நடைபெறும்.தொடர்ந்து சிறப்ப வாணவேடிக்கை நடைபெறும்.பின்னர் சப்தாவர்ணம் நிகழ்ச்சியில் பூதலிங் கசுவாமியிடமிருந்து அழுகியசோழவ நங்கை அம்மன் விடைபெறும் காட்சி நடைபெறும். தேர்த் திருவிழாவை முன்னிட்டு அரசு சிறப்ப பஸ்கள் இயக்கப் பட உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக தேர் நிலைக்கு நிற்க ஒரு நாளுக்கு மேலாகிய நிலையில் சமிபத்தில் புதிய இரும்பு சக்கரங்கள் மாட்டிய பிறகு சுமார் நான்கு மணி நேரத்திற்குள்ளாச தேர் நிலைக்கு வந்து விடு வது வழக்கமாகி விட்டது. திருவிழாவில் சிறப்பு நிகழ்ச்சிகளாக தினமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் சமய சொற்பொழிவுகளம், இன்னிசை, மெல்லிசைக் கச்சேரி களும்,நாட்டிய நிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் அதிகாரிகளும், பக்தர்கள் சேவா சங்கத் தலைவர் பாபு,துணைச் செய லாளர்கள் கோவி மற்றும் விழாக் குழுடினர்கள் செய்துள்ளனர்.