Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் ...  நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கு சிறப்பு பூஜை நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவில் மண்டபத்தில் உடைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 காரமடை அரங்கநாதர் கோவில் மண்டபத்தில் உடைப்பு

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2026
08:06

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், கல்யாண மண்டபத்தின் மேல் தளத்தின் காரைகள் உடைந்துள்ளன. இதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் சனிக்கிழமை நாட்களில், 1000க்கும் மேற்பட்ட பக்தர்களும் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் மாசி மகத் தேர் திருவிழா, வைகுண்ட ஏகாதசி விழா, புரட்டாசி சனிக்கிழமை ஆகிய விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். தேர்த்திருவிழாவில் லட்சம் பக்தர்களுக்கு மேல் பங்கேற்பர். புரட்டாசி மாதம், 5 சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, கோவிலில் உள்ள, தாசர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை வழங்கி, அரங்கநாதர் பெருமாளை வழிபட்டு செல்வது வழக்கம். வைகுண்ட ஏகாதசி அன்று திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் ஆகின்றன.

கோவிலில் திருக்கல்யாண மண்டபத்தின் மேல் தளத்தில் மூன்று இடங்களில், காரைகள் உடைந்து பெயர்ந்துள்ளன. மழை பெய்தால் உடைப்பின் வழியாக மழைநீர் உள்ளே சென்றால், மற்ற பகுதிகளிலும் வெடிப்பை ஏற்படுத்தும். மேலும் உடைப்பின் வழியாக உள்ளே தண்ணீர் சென்று, தேங்கி நிற்கும் பொழுது, இரும்பு கம்பிகள் துருப்பிடிக்க வாய்ப்புள்ளது. இதனால் பெரிய அளவில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கோவில் நிர்வாகம் உடனடியாக, திருக்கல்யாண மண்டபத்தில், உடைந்துள்ள காரைகளை பெயர்த்து எடுத்து விட்டு, புதிதாக தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது குறித்து கோவில் செயல் அலுவலர் முத்துசாமி கூறுகையில்," அரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் ஆகின்றன. அடுத்த ஆண்டு கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளன. அப்போது கோவிலில் அனைத்து திருப்பணிகளும் செய்யப்படும்," என்றார். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar