Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி ... காஞ்சி கோவில்களில் கும்பாபிஷேகம்; சங்கராச்சாரியார் விஜயேந்திரர் நடத்தி வைப்பு காஞ்சி கோவில்களில் கும்பாபிஷேகம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் மஞ்சுநாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்போரூர் மஞ்சுநாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2026
08:06

திருப்போரூர்: மஞ்சுநாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடந்தது.

திருப்போரூர் அடுத்த மேல்கல்வாய் கிராமத்தில் மஞ்சுநாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலில், கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கோவில் புனரமைக்கப்பட்டு, கடந்த 22ம் தேதி காலை விநாயகர் பூஜையும், மாலை முதல் கால யாக பூஜையுடன் மஹா கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து 23ம் தேதி காலை இரண்டாம் கால யாக சாலை பூஜையுடன், மஞ்சுநாதேஸ்வரர் சுவாமி கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விசேஷ ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி நிகழ்வும் நடந்தது; நேற்று முன்தினம் மாலை மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை நான்காம் கால யாக பூஜையுடன், யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கலசங்கள் புறப்பாடு நடந்தது. காலை 9:00 மணிக்கு கோவிலை சுற்றி வந்து, விமான மண்டப கும்பத்திற்கு புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, அவர்களின் ‘ஓம் நமச்சிவாய’ முழக்கம் விண்ணதிரச் செய்தது. தொடர்ந்து, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar