Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குழந்தை முத்துக்குமார சுவாமி ... நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 5ம் தேதி கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 5ம் தேதி கோலாகலம்

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2026
01:06

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கோபுரங்கள் புனரமைக்கப்பட்டு வரும் 5ம் தேதி மகா சம்ப்ரோக்ஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் நடக்கிறது.


நடுநாட்டு திருப்பதி. 108 திவ்ய தேசங்களில் ஒன்று. முதல் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக புராதான இதிகாசங்களில் குறிப்பிடப்படுகிறது. இத்தனை பழமையும், பெருமையும் மிக்க திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், கும்பாபிஷேகம் எனப்படும் மகா சம்ப்ரோக்ஷணம் வரும் 5ம் தேதி நடக்கிறது. கோவிலின் நுழைவு வாயிலில் அமைந்திருக்கும் கிழக்கு ராஜகோபுரம், மேற்கு ராஜகோபுரம், கட்டை கோபுரம் எனப்படும் வடக்கு ராஜகோபுரம், பிரதான சன்னதிகள் மற்றும் விமானங்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 29ம் தேதி மாலை 6:00 மணிக்கு பகவத் அனுக்ஞை, புண்யாகவாசனம், 30ம் தேதி காலை 9:00 மணிக்கு அக்னிப் பிரதிஷ்டையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கி 5ம் தேதி வரை காலை, மாலை இருவேளைகளும் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. கும்பாபிஷேக தினமான 5ம் தேதி காலை 6:00 மணிக்கு அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், பிரதான ஹோமங்கள், 8:00 மணிக்கு பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் மூலஸ்தான விமானங்கள், ராஜகோபுரங்கள், மூலவர் பெருமாள், தாயார், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், மணவாள மாமுனிவர்கள் சன்னதிகளில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் எனப்படும் மகா சம்ப்ரோக்ஷணம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகி கோலாகலன் முன்னின்று செய்து வருகிறார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 1ம் தேதியிலிருந்து 5ம் தேதி வரை மூலவர் சேவை கிடையாது. அந்த நாட்களில் யாகசாலையில் மட்டுமே பக்தர்கள் சேவை சாதிக்கலாம் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar