Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப ... வெள்ளியங்கிரி கோவிலில் சனி மகா பிரதோஷம் வெள்ளியங்கிரி கோவிலில் சனி மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல்: சிவன் கோயில்களில் சனி பிரதோஷ வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திண்டுக்கல்: சிவன் கோயில்களில் சனி பிரதோஷ வழிபாடு

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2026
09:06

திண்டுக்கல்: ஆனி மாத சனி மஹா பிரதோஷம் முன்னிட்டு நேற்று திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் சுவாமிக்கும் நந்தி பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை, காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் நந்தி, கொடிமரம், காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஆர்.எம்.காலனி வி.ஐ.பி., நகர் குபரே லிங்கேஸ்வரர் கோயிலில் நந்தி, குபேர லிங்கேஸ்வரருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.

திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர், ரயிலடி விநாயகர், கூட்டுறவு நகர் விநாயகர், பழநி ரோடு பத்ரகாளியம்மன், என்.ஜி.ஓ., காலனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுந்தரேஸ்வரர் உட்பட திண்டுக்கல்லில் அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

இதுபோல் எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டாஜலபதி கோயிலில் லட்சுமி நரசிம்மர் சன்னதி, நாகல்நகர் பாரதிபுரம் சாய்பாபா கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. வத்தலக்குண்டு அருகே கிருஷ்ணாபுரம் அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் வாலகுருநாத லிங்கேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் ஜலகண்டேஸ்வரர், நந்திக்கு திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதுபோல் கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி, காரமடை ராமலிங்க சுவாமி, சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஏகாம்பரேஸ்வரர், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தத்தால் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடந்தது.

இதுபோல் ரத்தினகிரீஸ்வரர் கோயில், விருப்பாச்சி தலையூற்று நல்காசி விஸ்வநாதர், நவாமரத்துப்பட்டிபுதுார் ஸ்படிகலிங்கேஸ்வரர், பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நந்திக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. கோயிலை சுற்றி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கைலாசநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதுபோல் அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர், காம்பார்பட்டி 1008 சிவன் கோயில், குட்டூர் அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

பழநி: பழநி முருகன் கோயிலில் கைலாசநாதர் சன்னதி, கிழக்கு ரதவீதி பெரியநாயகி அம்மன் கோயில், கோதைமங்கலம் பெரியாவுடையார், பாலசமுத்திரம் அமுதீஸ்வரர், மதனபுரம் அண்ணாமலை உண்ணாமுலை நாயகி அம்மன், அ.கலையம்புத்துார் கல்யாணியம்மன் கைலாசநாதர் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.

வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரர், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி, எரியோடு சாய்பாபா ஞானலாயம் உள்ளிட்ட கோயில்களில் சந்தனம், இளநீர், பன்னீர், பால், விபூதி உள்ளிட்ட பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar