கடலுார்: பண்ருட்டி ஜேஷ்டா தேவி கோவிலில் நட்சத்திர சிறப்பு ேஹாமம் நடந்தது.
பண்ருட்டி அடுத்த திராசு கிராமத்தில் உள்ள ஜேஷ்டா தேவி கோவிலில் கேட்டை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை கோ பூஜை, விநாயகர் பூஜை, கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம், நவக்கிரக ேஹாமம் நடந்தது. தொடர்ந்து, பூர்ணாகுதி, மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.