கள்ளக்குறிச்சி: தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர ஜெப யாகம் நடந்தது.
சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் காகபுஜண்டர் ஜீவசமாதிக்கு முன் ஏகாதச ருத்ர ஜெப யாகம் நேற்று முன்தினம் நடந்தது.
பாராயணம் முடிந்த பிறகு, யாக குண்டத்தில் மூலிகைகள், நெய் உள்ள பொருட்கள் கொண்டு ருத்ர ஹோமம் செய்யப்பட்டது.
பூஜை முடிந்ததும் கலசத்தில் உள்ள புனித நீரைக்கொண்டு சொர்ணபுரீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் செய்யப்பட்டது. உலக நன்மை, சகல தோஷங்கள் நீங்குதல் மற்றும் ஆரோக்கியத்திற்காக இந்த யாகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, சனி மகா பிரதோஷத்தையொட்டி மூலவர் மற்றும் நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.