Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி காளத்தீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்லியனுார் தென்கலை வரதராஜபெருமாள் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
வில்லியனுார் தென்கலை வரதராஜபெருமாள் கோவில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2026
11:06

 வில்லியனுார்: வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவ தேர் திருவிழா அமைச்சர் வடம் பிடித்து துவக்கிவைத்தார்.


வில்லியனுாரில் பிரசித்திபெற்ற பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் 22-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி மாட வீதியுலா நடந்தது. வரும் 3ம் தேதி வரையில் நடைபெறும் பிரமோற்சவத்தில் கடந்த 25ம் தேதி கருட சேவை நிகழ்ச்சியும், 26ம் தேதி வெள்ளி யானை வாகன வீதியுலா நடந்தது. முக்கிய விழாவாக நேற்று தேர் திருவிழா நடந்தது. காலை 7:00 மணியளவில் மிதுன லக்கினத்தில் அமைச்சர் நமச்சிவாயம் தேர் வடம் பிடித்து துவக்கிவைத்தார்.விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் ரவிக்குமார் மற்றும் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் பாலமுருகன், பா.ஜ., நிர்வாகிகள் மோகன்குமார், கண்ணபிரான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தேர் வில்லியனுார் நான்கு மாட வீதிகள் வழியாக சென்று காலை 9:20 மணியளவில் மீண்டும் தன் நிலையை வந்தடைந்தது. நாளை (1ம் தேதி) மாலை புஷ்ப பல்லக்கு வீதியுலா, 2ம் தேதி மாலை ஊஞ்சல் உற்சவம் மற்றும் 3ம் தேதி மாலை விடையாற்றி உள் புறப்பாடு நிகழ்ச்சியுடன் பிரமோற்சவ விழா நிறைவு பெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் தலைமையில் உற்சவதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் விவேகானந்தா கேந்திர சார்பில் சர்வ தீர்த்த மகா சங்கம் திருவிழா ... மேலும்
 
temple news
 புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்ட பவுர்ணமி ஆன்மிக நடைபயணத்தை ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கலச பூஜை நடந்தது.பழநி திருஆவினன்குடி ... மேலும்
 
temple news
 புதுச்சேரி: புதுச்சேரி காளத்தீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தீர்த்தவாரியுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar