குமளம்பட்டு பேசும் பெருமாள் கோவிலில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2026 04:07
வானுார்: குமளம்பட்டு பேசும் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது.
கிளியனுார் அடுத்த குமளம்பட்டு கிராமத்தில், பிரசித்தி பெற்ற பேசும் பெருமாள் கோவிலில் 5ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 24ம் தேதி முதல் தினமும் இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து இன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளச் செய்து, 9:00 மணிக்கு திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நாளை 4ம் தேதி தீர்த்தவாரி மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழுவினர் மற்றும் விழா அமைப்பாளர்கள் செய்திருந்தனர்.