திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருடாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2026 05:07
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஆண்டு ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்த நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று வருடாபிஷேகம் நடந்தது. இன்று காலை கோயில் கம்பத்கடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் தங்கம், வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பி வைத்து யாகசாலை பூஜை நடந்தது. மதியம் 2ம் கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டே குடங்களில் இருந்த புனித நீர் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், சத்யகிரீஸ்வரர், பவள கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள், மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்தில் உள்ள தங்கவேலுக்கு அபிஷேகம் நடந்தது. ஐந்து மூலவர்களுக்கும் சமகாலத்தில் தீபாராதனை நடந்தது.