திட்டக்குடி பெருமுளை முத்தையா சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2026 12:07
கடலூர்: திட்டக்குடி பெருமுளை முத்தையா சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி, நேற்று விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் மற்றும் முதல்கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று நவக்கிரக ஹோமம், மூன்றாம் கால யாகசாலை பூஜை, மூல மந்திர ஹோமம் நடந்தது.
முக்கிய நிகழ்வாக இன்று (5ம் தேதி) காலை நான்காம் கால யாகசாலை பூஜை, மூல மந்திர ஹோமம், கடம் புறப்பாடு, மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை தரிசித்து பரவசமடைந்தனர்.