Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராம பக்தர்களை புண்படுத்திய அயோத்தி ... திருமலைக்கேணியில் 250 காவடி எடுத்து உலக சாதனை முயற்சி திருமலைக்கேணியில் 250 காவடி எடுத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் திரண்ட பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2026
11:07

 திருத்தணி: வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளான நேற்று, திருத்தணி முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால், இரண்டு மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர்.


திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மற்றும் முகூர்த்த நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக, மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொளுத்தும் வெயிலிலும் திரண்டனர். திருத்தணி மலைக்கோவிலில், 12 திருமணங்களும், திருத்தணி நகரில் உள்ள தனியார் மண்டபங்களில் 63 திருமணங்களும் என, மொத்தம் 75 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் என, மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை தரிசித்தனர். இதனால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க, இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். நேற்று, இருசக்கர வாகனங்கள், குறிப்பிட்ட கார்கள் மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் நலன் கருதி, கோவில் நிர்வாகம் சார்பில், 10 பேருந்துகள் மலைக்கோவிலுக்கு இயக்கப்பட்டன. முன்னதாக, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க வேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. திருத்தணி கூடுதல் எஸ்.பி., ஷூபம் திமான் தலைமையில், 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar