Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேதக்கல்வியே கலாசாரத்தின் அடையாளம் ... 1,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்த ஹனுமன்; ஆஞ்சநேயரை தொட்டு வணங்க அனுமதிக்கும் கோவில்! 1,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேய்பிறை அஷ்டமி விரதம்; பைரவரை வழிபட குறைகள் யாவும் நீங்கும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேய்பிறை அஷ்டமி விரதம்; பைரவரை வழிபட குறைகள் யாவும் நீங்கும்!

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2026
10:07

சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். சிவபெருமானின் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர் பைரவர்.. பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்வது சிறப்பு.


பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழி பாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். இவர் சிவபெருமான் ஆட்சி செய்யும் இடமாக கருதப்படும் காசியில சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர்.  ஆணவம் கொ ண்ட பிரம்ம தேவனின் தலையை கொய்தவர்.  முனிவர்களின் சாபத்தில் இருந்து, தேவேந்தி ரன் மகன் ஜெயந்தனைக் காத்து அருளியவர். மன்மதனின் கர்வம் அடங்க செய்தவர்.  எல்லா வற்றுக்கும் மேலாக சூரியனின்  மகனான சனியை, சனீஸ்வரனாக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர். இப்படி பல சிறப்புகளை கொண்ட பைரவமூர்த் தியை ‘கால பைரவர், மார்த்தாண்ட பைரவர், சேத்திர பாலகர், சத்ரு சம்கார பைரவர், வடுக பைரவர், சொர்ணாகாசன பைரவர் உள்ளிட்ட பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறார்கள்.


பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம்.  பஞ்ச தீபம் என்பது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்ற வேண்டும். ஒரு தீபத்தில் இருந்து மற்றொரு தீபத்தை ஏற்றக்கூடாது. ஒவ்வொரு தீபத்தையும் தனித் தனியாக ஏற்ற வேண்டும். இப்படி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் விரைவி ல் நிறைவேறும் என்பது  நம்பிக்கையாகும். பைரவர் என்றால் ‘பயத்தை அளிப்பவர்’ என்று பொருள்.அதாவது தன்னை அண்டியவர்களி ன் குறைகளைக் களைய அவர்களின் எதிரிக ளுக்கு பயத்தை அளிப்பவர். ‘பாவத்தை நீக்கு பவர்’ மற்றும் ‘அடியார்களின் பயத்தை போக் குபவர்’ என்றும் பொருள் உண்டு. பைரவர், சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவர் ஆவார். அந்தகாசூரனை அழிப்பதற்காக சிவபெருமான் எடுத்த வடிவமே பைரவர் ஆவார். காலத்தை வென்ற பைரவரை வழிபடுவதன் மூலம் தெளிவான பாதையை அடைய முடியும். கடன் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், பைரவரை வழிபட சிக்கல்கள் தீரும். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar