Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news   பாரம்பரியத்தை பாதுகாக்கும் ...  அரியாங்குப்பம் சொர்ண பைரவர் கோவிலில் சிறப்பு யாகம் அரியாங்குப்பம் சொர்ண பைரவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளி மயில் வாகனத்தில் வல்லக்கோட்டை முருகன் வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெள்ளி மயில் வாகனத்தில் வல்லக்கோட்டை முருகன் வீதியுலா

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2026
10:07

ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கும்பாபிஷேக விழா நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, நேற்று 1,008 கலச அபிஷேகத்தை தொடந்து, வெள்ளி மயில் வாகன வீதியுலா விமரிசையாக நடைபெற்றது.


ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு ஜூன் 7ம் தேதி, கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. நேற்று முன்தினம் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு சத்ரு சம்கார யாக பூஜை நடைபெற்றது. அன்று மாலையில் 1,008 கலசங்கள் நிறுவப்பட்டு முதல் கால யாக பூஜை 18 அர்ச்சகர் களின் வேதமந்திர பாராயணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நேற்று மதியம் 12:00 மணிக்கு மூலவருக்கு 1,008 கலசாபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, மூலவருக்குச் சிறப்பு பூஜைகள் நடந்தன. முருகனுக்கு விருப்பமான சிவப்புநிற வெட்சிமலர் மாலை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார்.


அதை தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு உற்சவர் வள்ளி, தெய்வானை – சமேத முருகனுக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. வெட்சி எனும் செச்சை மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலிதார். இதையடுத்து, திருக் கல்யாண உத்சவம் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது. பின், மாங்கல்யதாரணம் நடைபெற்றது. இரவு வெள்ளி மயில் வாகனத்தில் முருகன் எழுந்தருளினார். வல்லக்கோட்டை கிராமத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar