பதிவு செய்த நாள்
08
ஜூலை
2026
10:07
பொள்ளாச்சி: பொள்ளாச்சி – பாலக்காடு ரோடு ராமநாதபுரத்தில், எஸ்.கே.எம்., மஹால் திறப்பு விழா நடந்தது. வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் கும்பாபிேஷகம், திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
மண்டபத்தில் நவீன வசதிகள், அதிக விருந்தினர்கள் அமரும் வசதி, அழகிய அலங்கார மற்றும் எல்.இ.டி., லைட்டிங், குளிர்சாதன அறைகள், இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. இதுதவிர, மண்டபம் முழுவதும் குளிர்சாதன வசதி, வாகனங்கள் நிறுத்தும் வசதி, கண்காணிப்பு கேமரா வசதிகள் உள்ளது.
விழாவில், எம்.பி., ஈஸ்வரசாமி, எம்.எல்.ஏ.,க்கள் நித்தியானந்தன், ஜெயராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன், தி.மு.க., மாவட்ட செயலாளர் முருகேசன், கேரள மாநிலம் சித்துார் எம்.எல்.ஏ., சுதீஷ் அச்சுதனன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சக்திவேல், எஸ்.கே.எம். மஹால் நிறுவனர் எஸ்.கே.மகாலிங்கம், வலசுபாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.