Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை உக்கடம் கரிவரதராஜ பெருமாள் ... பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்கள் பட்டியலில் பாலம்பேடு சிவன் கோயில்! பாதுகாக்கப்படும் நினைவுச் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிராம்பனன் கோவிலில் வழிப்பட்டது பெரும் பாக்கியம்.. நான் அதிர்ஷ்டசாலி; பிரதமர் மோடி பெருமிதம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிராம்பனன் கோவிலில் வழிப்பட்டது பெரும் பாக்கியம்.. நான் அதிர்ஷ்டசாலி; பிரதமர் மோடி பெருமிதம்

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2026
12:07

ஜகர்த்தா: ‘நறுமணம் வீசும் கலாசார பாரம்பரியம் தான், நம் இரு நாடுகளையும் ஒன்றிணைக்கிறது,’’ என்று பிரசித்தி பெற்ற பிராம்பனன் கோவிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி தெரிவித்தார்.


இந்தோனேஷியாவின் புகழ்பெற்ற  ஹிந்து கோவிலான பிராம்பனன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். பிறகு நிருபர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது: சிவபெருமானுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிடைப்பது எனது நற்பேறு. நான் குஜராத் மாநிலம் வத்நகரில் பிறந்தேன். ஹட்கேஷ்வர் மகாதேவர் கோவில் ஒரு மிக முக்கியமான புனிதத் தலமாகும். குஜராத் மண்ணில் அமைந்துள்ள சோமநாதர் கோவில், பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் முதலாவதாகத் திகழ்கிறது. காசி விஸ்வநாதரின் ஆசிகள் எப்போதும் என்னுடன் உள்ளன.  இன்று இங்கு வந்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவிலான பிராம்பனன் கோவிலில் வழிப்பட்டதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். மிகவும் அதிர்ஷ்டசாலியாகக் கருதுகிறேன். இது மிகவும் மகிழ்ச்சியான ஒரு அனுபவமாக அமைந்துள்ளது. நான் இங்கு வந்து மூன்று நாட்கள் ஆகின்றன.


இந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை, உரையாடல் மற்றும் சூழலில் ஒரு கலாசார நறுமணம் கமழ்வதை உணர முடிகிறது. இந்தியாவில் நாம் ஒவ்வொரு கணமும் உணரும் அதே நறுமணம் இது. கலாசாரப் பாரம்பரியத்தின் இந்த நறுமணம் நம்மை ஒருவருக்கொருவர் இணைக்கிறது. இந்தப் பாரம்பரியத்தை அவர்கள் பாதுகாத்து வைத்திருக்கும் விதத்திற்காக நான் இங்குள்ள மக்களுக்கு நன்றி கூறுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். நமது நிருபர்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar