கொல்லப்பட்டி கோயில் விழாவில் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2026 05:07
வடமதுரை: கொல்லப்பட்டியில் வெற்றி விநாயகர், காளியம்மன், முத்தாலம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன் கோயில் பெரிய கும்பிடு திருவிழா ஜூன் 28 ல் சுவாமி சாட்டுதலுடன் துவங்கி நாளை வரை நடக்கிறது. பொங்கல் வைத்தல், பூக்குழி இறங்குதல், அக்கினிச்சட்டி, முளைப்பாரி எடுத்தல் என பல்வேறு பாரம்பரிய வழிபாடுகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியாக படுகளம் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. இதற்காக புத்துார் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 அடி உயரம் கொண்ட இரு கழு மரங்கள் சிறப்பு பூஜைகள் செய்து நடப்பட்டு கோயில் முன்பாக படுகளம் அமைக்கப்பட்டது. பாரம்பரிய உரிமை பெற்ற புத்துார் இளைஞர்கள் மரத்தின் மீது ஏறி உச்சியில் இருந்த காணிக்கை, விபூதி பிரசாதத்தை எடுத்து கொண்டு கிழே இறங்கி பக்தர்களுக்கு வழங்கினர்.