Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெண்காடு விலங்கு தறித்த ... திருப்பதியில் ஜூலை முதல் செப்டம்பர் வரை எந்த நாட்களில் விஐபி தரிசனம் கிடையாது? தேதி வெளியீடு திருப்பதியில் ஜூலை முதல் செப்டம்பர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னியம்மன் கோவிலில் அடிப்படை வசதியின்றி பக்தர்கள் அவதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னியம்மன் கோவிலில் அடிப்படை வசதியின்றி பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2026
12:07

அரூர்; அரூர் அடுத்த, டி.அம்மாபேட்டையிலுள்ள சென்னியம்மன் கோவிலில்,  அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில், தென்பெண்ணை  ஆற்றின் கரையோரத்தில் சென்னியம்மன் கோவில் உள்ளது. தர்மபுரி,  கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய, மூன்று மாவட்ட எல்லையில்  அமைந்துள்ள இக்கோவிலுக்கு, ஆடி மாதம் பிறந்தவுடன் தினமும், ஏராளமான  பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஆடிப்பெருக்கு விழாவில் இக்கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 30,000க்கும் மேற்பட்ட, பக்தர்கள் வந்து செல்கின்றனர். 


ஆற்றிலுள்ள பாறைகளுக்கு மஞ்சள், குங்குமமிட்டு, பொரி துாவி, பூஜை செய்து வழிபாடு நடத்தி விட்டு, ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இங்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுவது தொடர்கதையாக உள்ளது. மேலும், இங்கு பலியிடப்படும் ஆடு, கோழிகளின் இறைச்சி கழிவை அகற்றாமல், துர்நாற்றம் வீசி வருகிறது. கோவில் மூலம் பல லட்சம் ரூபாய் வருவாய் வந்தபோதிலும், அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பஞ்., நிர்வாகம் சார்பில் எவ்வித வசதிகளும் பக்தர்களுக்கு செய்து தரப்படுவதில்லை.  எனவே, நடப்பாண்டிலாவது, சென்னியம்மன் கோவிலுக்கு வருபவர்களுக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட, அடிப்படை வசதிகளை செய்து தர,  மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar