Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் ஜூலை முதல் செப்டம்பர் ... தமிழகம் திரும்பும் சோழர் கால சிலைகள்; பிரதமர் மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தில் ஒப்புதல் தமிழகம் திரும்பும் சோழர் கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2026
02:07

திருநெல்வேலி; நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழா அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தா்கள் தாிசனம் செய்தனர்.


தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பா் - அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஒன்றாகும். பழைமையும் சிறப்பு வாய்ந்த இத் திருக்கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. அதில்  அன்னை காந்திமதி அம்பாளுக்கு ஆடிப்பூரத் திருவிழா மற்றும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாக்கள் முக்கியமானவை. அதன்படி இந்த ஆண்டுக்கான ஸ்ரீ காந்திமதி அம்பாளுக்கு ஆடி பூரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது, இத்திருவிழாவிற்காக ஸ்ரீ காந்திமதி அம்பாள் சுவாமி சன்னதியில் இருந்து வெள்ளி சப்பரத்தில் கடந்த புதன்கிழமை மாலை தன் வீடான அம்பாள் சன்னதிக்கு ஏழுந்தருளினார். ஆடிப்பூர திருவிழா கொடிஏற்ற தினமான இன்று அதிகாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் வழிபாடு கோ பூஜை  மற்றும் கணபதிஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. கொடிமரம் முன்பாக அஸ்திரதேவி வைத்து நவகலசங்கள் வைத்து வழிபாடு நடைபெற்றது.  கொடிப்பட்டம் திருக்கோயிலுக்குள் உலா வந்தது. அம்பாள் சன்னதி உற்சவர் மண்டபத்தில் ஸ்ரீ காந்திமதி அம்பாள் சிறப்பாக அலங்காிக்கப்பட்டு இருந்தார், காலை 07.30 மணிக்கு மேல் 08.30 க்குள் அம்பாள் சன்னதி முன் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு மஞ்சள் பால் தயிர் இளநீர் சந்தனம் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு  அபிஷேகம் நடைபெற்று புதுவஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டது. கொடிமரத்திற்கு சோடச தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் 10 நாட்களும்  தினந்தோறும் காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம் சிறப்பு  பூஜைகள் நடைபெற உள்ளது. வரும் 12ம் தேதி 4ம் திருநாள் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம்  நண்பகலிலும் , வரும் 18ம் தேதி 10ம் திருநாள் மாலை ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஸ்ரீகாந்திமதி அம்பாளுக்கு ஆடிப்பூர முளைகொட்டு திருவிழாவும்   வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.  திருவிழா ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினா், உபயதாரா்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்,

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar