Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லதங்காள் கோயில் கும்பாபிஷேகம்; ...  திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன், திரவுபதி திருக்கல்யாணம் திரவுபதியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உதாசின் பாவாஜி மடத்தில் சாதுர்மாஸ்ய விரதம் துவங்கிய சாதுக்கள்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 உதாசின் பாவாஜி மடத்தில் சாதுர்மாஸ்ய விரதம் துவங்கிய சாதுக்கள்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2026
03:07

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தில், சாதுர்மாஸ்ய விரத தொடக்க விழாவில், காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று ஆசியுரை வழங்கினார்.


காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தில் வடமாநில சாதுக்கள் 250க்கும் மேற்பட்டோர் சாதுர்மாஸ்ய விரதத்தை இன்று தொடங்கினர். விழாவிற்கு வருகை தந்த காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, பாவாஜி மடத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சங்கராச்சாரியார் விஜயேந்திரர், பாவாஜி மடத்தின் பீடாதிபதி அனுபவானந்துக்கு சால்வை அணிவித்து ஆதிசங்கரர் திருஉருவச் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார். இதன் பின்னர் ஆசியுரை வழங்கி சாதுக்களின் சாதுர்மாஸ்ய விரதத்தை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலின் சிறப்புகள், சாதுர்மாஸ்ய விரதத்தின் முக்கியத்துவம் ஆகியன குறித்து வட மாநில சாதுக்களுக்கு விளக்கி ஆசியுரை வழங்கினார். இதையடுத்து உதாசின் பாவாஜி மடத்தின் வடக்கு மாகாணத்திற்கான பீடாதிபதியாக சத்தியமுனிக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு வட மாநில மடத்தின் பீடாதிபதிகள் மகந்த் அத்வைதானந்த் சுவாமிகள், ராமநவமி சுவாமிகள், துர்காதாஸ் சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை உதாசின் பாவாஜி மடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுதான்சு முனி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். நிகழ்வில் தெலுங்கானா மாநில ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஜிதேந்திர கோயல், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூத்த மேலாளர் சுந்தரேச அய்யர், மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன், சங்கரா கல்லூரி முதல்வர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar