Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவெற்றியூர் கோயில் பக்தர்கள் ... பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் திருவாவடுதுறை ஆதினம் தரிசனம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று யோகினி ஏகாதசி, கார்த்திகை விரதம்; பெருமாள், முருகனை வழிபட நினைத்த காரியம் கைகூடும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று யோகினி ஏகாதசி, கார்த்திகை விரதம்; பெருமாள், முருகனை வழிபட நினைத்த காரியம் கைகூடும்!

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2026
10:07

ஆனி தேய்பிறையில் வரும் ஏகாதசி யோகினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.  ஆனி மாத தேய்பிறையில் தோன்றக்கூடிய யோகினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் கேட்டார், ஓ! முழுமுதற் கடவுளே! ஓ! மதுசூதனா நான் நிர்ஜல ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்டுள்ளேன். இப்பொழுது ஆனி மாத (ஜூன்/ஜூலை) தேய்ப்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி கேட்க விரும்புகிறேன். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னா! ஆனி மாத தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி நான் விளக்குகிறேன். இந்த ஏகாதசியின் பெயர் யோகினி. எல்லா கடுமையான பாவ விளைவுகளையும் அழித்து ஒருவரை ஜட இருப்பிலிருந்து விடுவிக்கிறது.  88,000 அந்தணர்களுக்கு உணவளிப்பதால் அடையும் பலனை இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதாலேயே அடையலாம். இந்த யோகினி ஏகாதசி ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் அழித்து, மிகுந்த தெய்வ பக்தியை கொடுக்கிறது.


முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கது. குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. குறிஞ்சிக்கடவுளாகக் குமரன் முருகனே மலைகளின் மீது ஆட்சி செய்கிறார். தெய்வங்களின் உயர்ந்தவராகத் திகழ்வதால் அவரைத் தெய்வசிகாமணி என்று போற்றுவர். கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும், காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதம். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர் கந்த பெருமான். கார்த்திகையில் கந்தனை வழிபட துன்பம், கடன் தொல்லை நீங்கும். முருகன் கோயில்களில் விளக்கேற்றி வழிபட வேண்டும். அரோகரா சொல்லி  ஆறுமுகனை வழிபட அனைத்தும் கிடைக்கும். இன்று முருகன், பெருமாளை வழிபட்டு கவலைகள் நீங்கி செல்வ வளம் பெறுவோம்!

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar