Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் பெரியகோவிலில் வாராஹி ... தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா; இனிப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆஷாட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் காளியம்மன், பகவதியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் காளியம்மன், பகவதியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2026
01:07

திண்டுக்கல்; கொடைரோடு அருகே சி.புதூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ காளியம்மன்,பகவதியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமர்ச்சையாக நடைபெற்றது.


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள சி.புதூர் கிராமத்தில்,நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ காளியம்மன்,பகவதியம்மன் கோவில் அஸ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.விழாவில் நேற்று முன்தினம் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் தாரை தப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பிரமாண்ட யாகசாலையில் வைத்து,கணபதி ஹோமம்,கோபூஜை,லட்சுமி பூஜை,வாஸ்து சாந்தி,அம்மன் உயிரூட்டல் நிகழ்ச்சி உள்ளிட்ட ஆறுகால யாக வேள்விகள் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் யாக வேள்விகள் நடைபெற்றது, விழாவில் முக்கிய நிகழ்வாக கடாம் புறப்படும் நிகழ்ச்சியை அடுத்து,சீனிவாச நரசிம்ம சர்மா சுவாமிகள் தலைமையில்,சுரேஷ் பவுன் சிவாச்சாரிகள் முன்னிலையில் மங்கல இசையுடன் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் எடுத்து வரப்பட்டு இராஜகோபுர கலசத்திற்கு புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது அப்போது கருட பகவான் வானில் வட்டமிட்டதைக் கண்ட பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற விண்ணை முட்டும் கோஷங்களை எழுப்பி அம்மனை வழிபட்டனர்.தொடர்ந்து பரிவார தெய்வங்களான துர்க்கை அம்மன், விநாயகர்,ஊர்காலசாமி,கருப்பணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.  மேலும் இந்த நிகழ்ச்சிக்கு நிலக்கோட்டை,வத்தலக்குண்டு, சின்னாளபட்டி,செம்பட்டி, சோழவந்தான்,நெல்லை,மதுரை, கோவை,பாண்டிச்சேரி,சென்னை தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்,விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதான வழங்கப்பட்டது,விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar