Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் ... ஆனி திருவாதிரை; செவிலிமேடு ராமானுஜருக்கு வெள்ளி கவச அலங்காரம் ஆனி திருவாதிரை; செவிலிமேடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
படுகர் கிராமங்களில் ‘ஹிரியோடைய்யா’ திருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
படுகர் கிராமங்களில் ‘ஹிரியோடைய்யா’ திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2026
06:07

கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக சமுதாய மக்கள் வசிக்கும் கிராமங்களில்,‘ஹிரியோடைய்யா’ திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது.

படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ‘ஹிரியோடைய்யா’ திருவிழா இன்று நடந்தது. தொதநாடு சீமைக்கு உட்பட்ட, கடநாடு, கம்பட்டி, ஒன்னதலை, டி. மணியட்டி, கக்குச்சி பனஹட்டி மற்றும் எப்பநாடு கிராமங்களில் உள்ள ஹிரியோடைய்யா கோவில்களில் இருந்து, சற்று தொலைவில் அமைந்துள்ள வனக்கோவிலுக்கு (பனகுடி) பக்தர்கள் சங்கொலி எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடை திறக்கப்படும் இக்கோவிலில், மூங்கில் குச்சிகளை உரசி அதிலிருந்து வெளியேறிய தீப்பொறியில் நெய் தீபம் ஏற்றப்பட்டது. வனப்பகுதியில் இருந்து சேகரித்து வரப்பட்ட கொம்பு தேன், தும்பை, முதல் கன்று குட்டி ஈன்ற பசு மாட்டின் பால் ஆகியவற்றை கொண்டு அய்யனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

தொடர்ந்து, பாரம்பரிய உடை அணிந்த பக்தர்கள், காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினர். இந்த கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதால், அவர்கள் கோவிலின் வெளிப்புறத்தில் நின்று காணிக்கை செலுத்தி வழிபட்டனர். இதனை அடுத்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜை முடிந்தபின், கோவில் நடை சாற்றப்பட்டு, பக்தர்கள் மீண்டும் சங்கொலி எழுப்பி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு ஊர்வலமாக திரும்பினர். இந்த விழாவால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் சமுதாய கிராமங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தன. இந்த விழாவின் முக்கிய அம்சமாக, நாளை (செவ்வாய்) ஹரிக்கட்டு என்ற தானிய திருவிழா நடக்கிறது. கோத்தகிரி பொரங்காடு சீமைக்குட்பட்ட தந்தநாடு தொட்டூர் கிராமத்தில், ‘மண்டைதண்டு’ திருவிழா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar