பெரியநாயக்கன்பாளையம் வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2026 07:07
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பயனீர் நகரில் உள்ள வெற்றி விநாயகர் கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.
கோயில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேக விழா கணபதி வேள்வியுடன் துவங்கியது. தொடர்ந்து, பார்வதி உடனமர் கயிலை நாத சிவபெருமான், பாலமுருகர், கன்னிமூல கணபதி, தென்முக பரமன், ஆதிநாராயணர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. புனித நீர் அடங்கிய தீர்த்த குடங்களை சிவாச்சாரியார்கள் கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து, பின்னர் கலசத்துக்கு ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினர். சிவானந்தா தவக்குடில் சிவம் சுயபிரகாசனந்தா சுவாமிகளின் அருள் உரை நடந்தது. வெற்றி விநாயகருக்கு அபிஷேக ஆராதனை, பேரொளி வழிபாடு, அன்னதானம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.