பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஜூலை 17ல் ஆடி லட்சார்ச்சனை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2026 10:07
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை ஜூலை 17ல் துவங்குகிறது.
பழநி முருகன் கோயிலின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி முதல் நாளான ஜூலை 17ல் துவங்கி ஆக.,10 வரை லட்சார்ச்சனை நடக்க உள்ளது. ஆடி முதல் நாளில் அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்படுகிறது. ஆக.,11ல் ஆடி லட்சார்ச்சனை யாக பூஜை நடக்க உள்ளது. மேலும் பெரியநாயகி அம்மனுக்கு ஜூலை 24ல் மீனாட்சி அம்மன் அலங்காரம், ஜூலை 31ல் சந்தனக்காப்பு அலங்காரம், ஆக.,7ல் விசாலாட்சி அலங்காரம், ஆக.,14ல் மகா அபிஷேகம், தங்கக்கவச அலங்காரம் செய்யப்படுகிறது. அன்று இரவு வெள்ளி ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடக்க உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.