சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி அமாவாசை வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2026 11:07
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு, பேரையூர் போலீசார், மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.