Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் ஜூலை 21ல் துவக்கம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் கவுமாரியம்மன் கோவில் திருவிழா; அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரியகுளம் கவுமாரியம்மன் கோவில் திருவிழா; அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2026
06:07

பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் நிறைவு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் விடிய, விடிய அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர்.


பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா ஜூன் 30ல் சாட்டுதல் மற்றும் கம்பம் நடப்பட்டது. ஜூலை 6 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தினமும் அம்மன் ரிஷபம், குதிரை, சிம்மம், யானை, அன்னபட்சி உட்பட பல்வேறு வாகனத்தில் வீதி உலா வந்தார். பத்து நாட்கள் நடந்த திருவிழாவில் இன்று ஜூலை 15ல், அதிகாலை 3:00 மணி முதல் உள்ளூர் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் 20 அடி வேலால் கன்னத்தில் அலகு குத்தி அம்மனை தரிசனம் செய்தார். ஏராளமான பக்தர்கள் இரட்டை அக்னிசட்டி, தொட்டிலில் குழந்தையை வைத்தும், கன்னம், நாக்கில் அலகு குத்தி அதிகாலை முதல் இரவு வரை அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். மலர் அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அம்மனை தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகத்தினர் அவருக்கு மரியாதை செய்தனர். கோயில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, டி.எஸ்.பி., நல்லு தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சத்ய சாயி சேவா சங்கம் தன்னார்வலர்கள் இலவச காலணி பாதுகாப்பு சேவை செய்தனர். ஜூலை 21ல் மறுபூஜை, பாலாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுந்தரி மற்றும் மண்டகபடிதாரர்கள், தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar