கொத்தங்குடி இடையன் காளியம்மன் கோயிலில் வெள்ளி விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2026 03:07
தேவகோட்டை; தேவகோட்டை தாலுகா கொத்தங்குடியில் இடையன் காளியம்மன் கோயில் உள்ளது.இங்கு ஆடித்திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் நடந்தன. இன்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகங்களை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து 1300 பெண்கள் இடையன் காளியம்மன் முன்பு விளக்கேற்றி விளக்கு பூஜைகள் நடத்தி அம்மனை வழிபட்டனர்.