மாசாணி அம்மன் கோயில் பூக்குழி விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2026 03:07
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, அளுந்திக் கோட்டை மாசாணியம்மன் கோயில் பூக்குழி விழா நடைபெற்றது. முன்னதாக, விரதம் இருந்த பக்தர்கள் புனித நீராடிய பின்பு நேற்று அதிகாலையில் விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்று, மாசாணி அம்மன் கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பின்னர் மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.