திருப்புலிவனம் திரிசூலகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2026 10:07
உத்திரமேரூர்: திருப்புலிவனம் திரிசூல காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில் உள்ள திரிசூலகாளியமமன் கோவிலில், 42வது ஆண்டு தீமிதி திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, உலக நன்மைக்காக யாக வேள்வியும், திருவிளக்கு பூஜையும் நடந்தன. மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இரவு காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீமிதித்தனர். அதன் பின், அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.