சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் நாயனார் குருபூஜை பெருவிழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2026 03:07
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் நாயனார் குருபூஜை பெருவிழா நடைபெற்றது.
கொங்கேழு சிவஸ்தலங்களில் முதன்மையானதாகவும்,காசியில் வாசி அவிநாசி என போற்றுதலுக்குரிய ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை மற்றும் சேரமான் பெருமான் நாயனார் குருபூஜை பெருவிழா நடைபெற்றது. பின்னர்,திருமுறை கண்ட விநாயகர் மற்றும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,மாணிக்கவாசகர் சுவாமிகள் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நால்வர் பெருமக்களுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் மற்றும் சேரமான் பெருமான் அருளிச் செய்த சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணம் வரலாற்று திருப்பதிகங்களை "திருமுறை கலாநிதி கரூர் குமார சாமிநாத தேசிகர் தலைமையில் ஓதுவாமூர்த்திகள் மற்றும் பக்க இசைக் கலைஞர்கள் பண்ணிசை மரபோடு பாராயணம் செய்தனர். இதில் ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்று உடன் பாராயணம் செய்தனர்.